இன்னும் ஒரு வாரத்தில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும்!

Date:

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது செப்டெம்பர் மாதம் முதல் சில தினங்களில் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை தாள்கள் திருத்தும் பணியின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட இந்தத் பரீட்சை, ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17, 2023 வரை 2,200 பரீட்சை மையங்களில் நடைபெற்றது.

278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் இதற்காக விண்ணப்பித்திருந்தனர்.

ஆசிரியர்களின் தொழில்முறை நடவடிக்கைகளால் உயர்தர விடைத்தாள்களை சரிபார்ப்பதில் அவ்வப்போது தடங்கல் ஏற்பட்டதால் இந்த ஆண்டு நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சையை பரீட்சை திணைக்களம் ஒத்திவைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...