இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளிகளின் புதிய திட்டம்!

Date:

 வழங்காத இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.

ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் மோசடிகளே இ.போ.சபை நட்டமடைய முக்கிய காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த மோசடிகளை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இ.போ.ச வருமானத்தில் ஒரு பகுதியை சாரதிகளும் நடத்துனர்களும் பகிர்ந்து கொள்வதாகவும், இது அன்றாட நடவடிக்கை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இ.போ.ச நாளொன்றுக்கு பெற வேண்டிய 100 இலட்சம் ரூபாவை சாரதிகளும் நடத்துனர்களும் பகிர்ந்து கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிடுகின்றார்.

இ.போ.ச பேருந்தில் ஏறிய பின்னர் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளுமாறும், பயணச்சீட்டு கிடைக்காவிட்டால் புதிய முறைமையின் ஊடாக முறைப்பாடு செய்யுமாறும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...