இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பதிவை இடைநிறுத்தி விளையாட்டுத்துறை அமைச்சர் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
தற்காலிக பணி முறையாக சங்கத்தின் செயற்பாடுகளை தொடர்வதற்கு ஏழு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
7 பேர் கொண்ட குழுவின் தலைவராக மகேஷ் கம்மன்பில நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை ஆட்டோ மொபைல் சங்கத்தின் தேர்தலை நடத்துவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.