உலகக் கிண்ண கிரிக்கெட் 2023 தொடருக்கான புதிய அட்டவணை வெளியீடு!

Date:

உலக கிண்ண கிரிக்கெட் 2023 தொடர் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 19 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்தியாவில் உள்ள பத்து நகரங்களில் இந்த போட்டிகள் நடை பெறவுள்ளன. இதில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து என பத்து அணிகள் பங்கேற்கின்றன.

செப்டம்பர் 29 ஆம் திகதி மட்டும் மூன்று பயிற்சி போட்டிகள் நடைபெறுகின்றன.

பங்காளதேஷ் மற்றும் இலங்கை அணிகள், தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.

செப்டம்பர் 30 ஆம் திகதி இரண்டு பயிற்சி போட்டிகள் நடைபெறுகின்றன. இவற்றில் இந்தியா மற்றும் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஒக்டோபர் 2 ஆம் திகதி இரண்டு பயிற்சி போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இங்கிலாந்து மற்றும் பங்காளதேஷ், நியூசிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் விளையாடுகின்றன.

ஒக்டோபர் 3 ஆம் நடைபெறும் மூன்று போட்டிகள், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை, இந்தியா மற்றும் நெதர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் விளையாடவுள்ளன.

உலக கிண்ண 2023 தொடருக்கான நுழைவுச்சீட்டுக்களை இந்திய இரசிகர்கள் புக்மைஷோ தளத்தில் வாங்கிட முடியும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

உலக கிண்ண 2023 தொடரில் மொத்தம் 58 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பத்து பயிற்சி போட்டிகளும் அடங்கும்.

நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (ஒகஸ்ட் 24) தொடக்கம் செப்டம்பர் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...