ஊவா வெல்லஸ்ஸ கல்விச் செயற்பாடுகள் 21 முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்!

Date:

தற்போது காலவரையறையின்றி மூடப்பட்ட ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு அனைத்து பீடங்களின் கற்கை நடவடிக்கைகள் இம்மாதம் 21ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, மூன்றாம் ஆண்டு பல்கலைக்கழக விடுதிகளில் பயிலும் மாணவர்களை எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் தங்களுடைய விடுதிகளுக்குத் திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருடத்தின் அனைத்து பீடங்களின் கற்கைகளும் இம்மாதம் 28ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்தார்.

இரண்டாம் ஆண்டு அனைத்து பீட மாணவர்களுக்கும் செப்டெம்பர் 2ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு படிப்பு விடுமுறை வழங்கப்படும் என ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

உலக மனிதநேய தினம்: மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதும் சவூதி அரேபியா – இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆகஸ்ட்...

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில்...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி...