கடும் வறட்சியான காலநிலை காரணமாக கறவை மாடுகளுக்குத் தேவையான புற்களை பெற்றுக்கொடுப்பதில் பால் பாற்பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் கறவை மாடுகளுக்கு புல் மேய்வதற்கு காணியொன்றை ஒதுக்கித்தருமாறு கோரி பால் பண்ணையாளர்கள் தங்கள் மாடுகள்மீது எதிர்ப்பு பதாதைகளை தொங்கவிட்டு போராட்டமொன்றை செய்துள்ளனர்.
கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்தில் வசிக்கும் பால் பண்ணையாளர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், ஒலுங்கேகிரிக்கு அருகில் உள்ள வயல்வெளிக்கு மாடுகளை கொண்டுசென்று இவ்வாறு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.