கந்தானை இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் வெளியேறிய புகை காரணமாக பாதிக்கப்பட்ட 85 மாணவிகள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கந்தானை, தேவாலய வீதியில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
குறித்த தொழிற்சாலையானது கந்தானை புனித செபஸ்தியார் பெண்கள் கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் தீ விபத்தின் போது வெளியேறிய புகை காரணமாக 85 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 85 மாணவிகளும் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ராகம போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கினறன.
கந்தானை இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.