கலை பிரிவு பட்டதாரிகள் வௌிநாடு செல்வதில் சிக்கல்!

Date:

கலைப் பிரிவில் பட்டம் பெற்றவர்களில் 70 வீதமானவர்களுக்கு இலங்கையில் வேலை இல்லை என்றும், அதனால்தான் முழுப் பல்கலைக்கழக அமைப்பும் விமர்சனத்துக்குள்ளானது என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்  சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிப்பது தொடர்பான முன்மொழிவுகளைத் தயாரிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வெளிநாடு செல்லும் தரப்பினரிடம் இருந்து பட்டப்படிப்பிற்காக அரசாங்கம் செலவிடும் தொகையை மீளப்பெறுவதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றார்.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...