காலி சிறைக் கைதிகளிடையே பரவிய பக்டீரியா கொழும்பில் பரவும் அபாயம்!

Date:

காலி சிறைசாலையில் கைதிகளிடையே பரவிய Meningococcal பக்டீரியா பாதிப்புக்குள்ளான நபரொருவர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜா-ஏல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தொற்றுக்குளானமை கண்டறியப்பட்டுள்ளது.

இரத்மலானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள நிறுவனமொன்றில் அவர் பணிபுரிவதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் சுகவீனம் காரணமாக ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்மலானை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நபர் பணியாற்றி வந்த இடத்திலுள்ள சுமார் 30 பேர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், நோயெதிர்ப்பு சக்தி மருந்துகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, Meningococcal பக்டீரியா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரையும் அடையாளம் காண்பது மிகவும் அவசியமாகும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பக்டீரியா பரவுவதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பது குறித்தும் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.

குறித்த நோய் தாக்கம் காரணமாக இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன், ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர்.

அத்துடன், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதுடன், சிறைச்சாலையில் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன.

ஆரம்பத்தில் நோய்த் தொற்றுக்கான காரணம் கண்டறியப்படாத போதும் பின்னர் Meningococcal பக்டீரியா தொற்றினால் இந்த நிலைமை ஏற்பட்டதாக சுகாதார துறையினால் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், Meningococcal பக்டீரியா தொற்றுக்கள் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என பொதுமக்களுக்கு தொற்றுநோயியல் பிரிவு வேண்டுகோள் விடுத்திருந்தது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...