குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர்கள் தரப்பால் பொங்கல் நிகழ்வு இன்று இடம்பெற்று வருகின்றது.
குருந்தி விகாரையில் 03 நாட்களுக்கு ரதன சூத்திரம் ஓதுவதற்கான ஏற்பாடுகளும் இன்று (18) பிக்குகளால் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அதற்காக பக்தர் குழுவினர் இணைத்துள்ளனர்.
அங்கு, சிலர் குழப்பங்களை ஏற்படுத்த முயன்ற போதும் பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
#Kurunthoormalai ‘kurundi vihara’ Buddhist monk Galgamuwa santhabodhi entered the area where the Tamil people were peacefully engaged in Pongal worship as per the Archeology Department's strict rules and tried to disrupt the Pongal worship of the Tamils. pic.twitter.com/hOmaUjFoAk
— kumanan (@kumanan93) August 18, 2023
குருந்தூர் மலை ஆதிசிவன் ஆலயத்தில் பொங்கல் வழிபாடு அமைதியான முறையில் இடம்பெற்றுவரும் நிலையில், அந்த பகுதிக்கு வருகைதந்த குருந்தி விகாரை விகாராதிபதியின் வருகையால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆவேசமடைந்த தமிழ் மக்களை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.