கூகுள் நிறுவனத்திற்கு அபராதம்: ரஷ்ய நீதிமன்றம் உத்தரவு!

Date:

சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.

இந்த போர் தொடர்பாக தவறான தகவல்கள் அடங்கிய பல்வேறு வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றம் செய்திருப்பதாக கூகுள் நிறுவனம் மீது ரஷ்யா குற்றச்சாட்டியுள்ளது.

இந்த வீடியோக்களை நீக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா அறிவுறுத்தி இருந்தது. ஆனால் அவற்றை நீக்கவில்லை. எனவே இது தொடர்பாக மாஸ்கோவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், கூகுள் நிறுவனத்திற்கு 30 இலட்சம் ரூபிள் அபராதம் விதித்துள்ளது.

முன்னதாக இதைப்போன்ற குற்றச்சாட்டில் ஆப்பிள் மற்றும் விக்கிபீடியா நிறுவனங்களுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...