புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ திணைக்களங்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வ மத அறநெறி (அஹதிய்யா) பாடசாலை மாணவர்களுக்கான சமய நல்லிணக்க நிகழ்ச்சி அண்மையில் நீர்கொழும்பு மேரி ஸ்டெல்லா கல்லூரியில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் சர்வ மதகுருமார்கள், புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக,குறித்த அமைச்சின் செயலாளர்,மேலதிகச் செயலாளர்கள்,நான்கு சமய திணைக்களங்களின் பணிப்பாளர்கள்,சர்வ மத அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.