கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் மாஹரிஸ், செடியோ மானே, பென்சிமா உள்ளிட்ட உலகின் முன்னணி வீரர்களை அதிகவிலை கொடுத்து சவூதி அரேபியாவின் கால்பந்து கழகங்கள் தன் பக்கம் ஈர்த்துள்ளன.
இந்த வரிசையில் தற்போது கால்பந்து உலகில் நட்சத்திர வீரரும் பிரேசில் கால்பந்து அணி வீரருமான நெய்மார் இணைந்துள்ளார்.
அதற்கமைய, நெய்மார் டீ சில்வா சாண்டோஸ் சவூதி அரேபியாவின் முன்னணி கழகமான , அல்-ஹிலாலுடன் 129.4 மில்லியன் பெறுமதியான இரண்டு வருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.