பொது பாதுகாப்பை உறுதிப்படுத்த நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை அழைத்து தயார் நிலையில் வைக்கும் உத்தரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு சட்ட மூலத்தின் 12 வது ஷரத்திற்கு அமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.