பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
“இலங்கையில் பயிற்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் PT-6 விமானங்கள் 1958 இல் தயாரிக்கப்பட்டவையாகும். அவற்றின் இயந்திரங்கள் 1961இல் தயாரிக்கப்பட்டவை. சீனாவில் இருந்தே இந்த விமானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
குறித்த விமானங்கள் தயாரிக்கப்பட்ட தருணத்தில் நாம் பிறந்திருக்கவும் இல்லை. இந்த பழைய விமானங்களை பயிற்சிக்காக பயன்படுத்துவது நியாயமற்றது மற்றும் வருந்தத்தக்கது. அவற்றை பயிற்சிக்காக பயன்படுத்தாமல் அருங்காட்சியகங்களிலேயே வைக்க வேண்டும்.
விபத்துகள் தொடர்பிலான விசாரணை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுவதில்லை. இவற்றுக்கு பொறுப்புக்கூற வேண்டியது யார்? அரசாங்கம் இதுதொடர்பில் உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும்.தொடர்ந்து இவற்றை பயன்படுத்தி எமது விமானிகளை பலிகொடுக்க முடியாது” என்றார்.
விமானப் படைக்குச் சொந்தமான PT-6 ரக பயிற்சி விமானம் ஒன்று திருகோணமலை விமானப் படைத் தளத்தின் சீன குடா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நேற்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு விமானப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.