தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் விசேட அறிவிப்பு!

Date:

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

களனி ஆற்றின் நீர் மட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அம்பத்தளை பிரதேசத்தில் மணல் மேடு அமைக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் அஜித் பெரேரா குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த நாட்களில், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் குடிநீர் சம்பந்தமான சிக்கல் நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைப் பற்றிப் பேசினால், அவற்றிற்குப் போதுமான தண்ணீரைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டாலும் , அதனை தீர்ப்பதற்காக களனி கங்கை ஊடாக  அம்பத்தளை பிரதேசத்தில் மணல் மேடு அமைக்கப்பட்டுள்ளது. நாம் எதிர்நோக்கும் இரண்டு பிரதான பிரச்சினைகளான ஆற்றின் நீர் மட்டம் குறைதல் மற்றும் குடிநீரில் உப்பு நீர் கலந்தப்பது. அந்த சிக்கலை தீர்ப்பதற்காகவே மணல் மேடு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளுக்கு தொடர்ந்து நீர் விநியோகிக்கப்படும்.

இருப்பினும், தற்போதைய வெப்பமான வானிலையால் நுகர்வோர் அதிக அளவு தண்ணீரை பயன்படுத்துவதால், எதிர்காலத்தில் சில சிக்கல் நிலைமைகள் தோன்றலாம். எனவே, எங்களால் வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு நுகர்வோரிடம் கேட்டுக்கொள்கிறோம். நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்காக முடிந்தவரை நதி மாசுபாட்டைக் குறைப்பதற்கு  உதவுங்கள்.” என்றார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...