நீர் கட்டண திருத்தத்திற்கு இணையாக கழிவகற்றல் சுத்திகரிப்பு சேவை கட்டணங்கள் அதிகரிப்பு!

Date:

நீர் கட்டண திருத்தத்திற்கு இணையாக இன்று (03) முதல் கழிவகற்றல் சுத்திகரிப்பு சேவை கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கையொப்பத்துடன் ​வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஏதேனுமொரு மாதத்தில் பாவனை பூச்சியமாக இருந்தாலும் நீர் வழங்கல் மற்றும் கழிவகற்றல் சுத்திகரிப்பு சேவை கட்டணத்தை செலுத்தியாக வேண்டும்.

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் விநியோகத்திற்கு மேலதிகமாக வேறு சில மாற்று நீர் ஆதாரங்களை பயன்படுத்தப்படும் போது அதற்கான பாவனை கட்டணமாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் அந்த தருணத்தில் தீர்மானிக்கும் மேலதிக கட்டணத்தை பாவனையாளர் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளரினால் அதிகாரமளிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர் ஒருவர் வீட்டிற்கு சென்று கட்டணங்களை வசூலிப்பாராயின் அதற்காக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் தீர்மானிக்கப்படும் சேவை கட்டணத்தை செலுத்த வேண்டியதும் அவசியமாகும்.

மேலும் நீர் கட்டணம் மற்றும் கழிவகற்றல் சுத்திகரிப்பு சேவை கட்டணப் பட்டியல்கள் கிடைக்கப்பெற்று 30 நாட்களுக்குள் செலுத்த தவறும் வாடிக்கையாளர்களின் நீர் விநியோகம் மற்றும் கழிவகற்றல் சுத்திகரிப்பு சேவை என்பன துண்டிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...