நுவரெலியா வீடொன்றில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியான இளம் தம்பதியின் சடலங்கள் கண்டெடுப்பு!

Date:

நுவரெலியா – டொப்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் தம்பதியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்ததை அடுத்து, கணவரினால் மனைவி சூட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த சம்பவத்தில் 26 வயதான யுவதி ஒருவரும், 28 வயதான இளைஞன் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தியே இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...