பதுளை வைத்தியசாலையின் மின் கட்டணம் மீள் செலுத்தப்பட்டது!

Date:

பதுளை போதனா வைத்தியசாலையில் துண்டிக்கப்பட்ட மின் விநியோகத்தை மீள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 7 கோடி ரூபா நிலுவையிலுள்ள மின்சாரக் கட்டணம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்த நிலையில், நேற்றைய தினம் (10) வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிப் பிரிவு, மருத்துவக் குடியிருப்பு, தாதியர் தங்கும் விடுதி ஆகியவற்றில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று (10) பிற்பகல் வைத்தியசாலை நிர்வாகம் 20 மில்லியன் ரூபாவை செலுத்தியதாகவும், மிகுதித் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்துவதாக எழுத்துமூலம் அறிவித்ததையடுத்து, மின்சார விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சார துண்டிப்பு காரணமாக வைத்தியசாலைக்கு வருகைத்தந்த நோயாளர்பள் சில அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...