பயிற்சி விமானம் விபத்திற்குள்ளானமை தொடர்பில் ஆராய விசேட குழு!

Date:

திருகோணமலை சீன குடா பகுதியில் பயிற்சி விமானம் விபத்திற்குள்ளானமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானமொன்று சீனன்குடாவில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று திருகோணமலை விமானப்படைத் தளத்தின் சீனக்குடா முகாம் அமைந்துள்ள பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இலங்கை விமான படையின் சீனக்குடா பொறியியல் பீடத்தில் இலக்கம் 1 பயிற்சித்தளத்தில் விமானிகளை பயிற்சியளிக்க பயன்படுத்தப்பட்ட PT 6 வகைகயைச் சேர்ந்த விமானமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் விமான சோதனைக் கடமைகளுக்காக பயணித்த விமானி மற்றும் பொறியியலாளர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக விமானப்படை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இன்று காலை 11.25 இக்கு புறப்பட்ட குறித்த விமானம், 11.27 மணிக்கு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசேட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இதற்காக விசேட குழுவொன்று விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...