இந்நாட்டிலுள்ள சுமார் 50% பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களாக மாற வேண்டும் என்றும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார சுட்டிக்காட்டினார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 12,992 இருக்க வேண்டியிருந்தாலும், தற்போது 6,548 விரிவுரையாளர்களே பணிபுரிந்து வருவதாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன், கல்விசாரா பணியாளர்களிலும் இந்த நிலைமையைக் காணக்கூடியதாக உள்ளதால் இதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையில் விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சிக்கலாக மாறியுள்ளதாகவும், குறைந்தபட்சம் 1,000 விரிவுரையாளர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.