பியகம வர்த்தக வலய குப்பை மலை தீயினால் பிரதேச வாசிகளுக்குப் பாதிப்பு!

Date:

பியகம வர்த்தக வலயத்தினுள் காணப்படும் குப்பை மலை தீப்பற்றிக் கொண்டதால் அதனை சூழ உள்ள நாகஹவத்த, வேகத்த, வலகம பூந்தோட்டம் மற்றும் கந்தவத்த முதலான பகுதியிலூள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றது.

இரசாயனப்பொருட்கள், பிளாஸ்டிக், ரெஜிபோம், பொலித்தீன், துணி மற்றும் உலோகத்துண்டுகளும் இந்த குப்பை தீப்பிடித்து எரிந்ததன் காரணமாக மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகளில் சுவாசிக்க கஷ்டமான நிலை ஏற்பட்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த குப்பை மலை தானாக தீப்பற்றியதாக வர்த்தக வலயத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டாலும் இங்கு குப்பை கூலங்களில் அகப்பட்டு உள்ள உலோகப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட காரியம் என பிரதேச மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது வருடா வருடம் திட்டமிட்டு கழிவு பொருட்கள் வாங்கும் வியாபாரிகளின் ஒத்துழைப்புடன் தீவைக்கப்பட்டதாகவும் பிரதேச வாசிகள் சிலர் எமது செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

பாடசாலை பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் 1 முதல் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஒன்லைன்...

பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் இடியுடன் மழை

இன்று (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...