புகையிரத கட்டுப்பாட்டாளர்களினால் நேற்று (22) இரவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட திடீர் தொழிற்சங்க நடவடிக்கையினால், பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
புகையிரத பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கு தாக்கிய சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே புகையிரத கட்டுப்பாட்டாளர்களினால் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை புகையிரத பிரிவில் நேற்று இரவு 7 மணியளவில் புகையிரத பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவர் மீது அதே பிரிவில் சேவை செய்யும் இன்னுமொரு ஊழியர் ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமையை, இந்த தாக்குதல் சம்பவத்துக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் சேவைகளிலிருந்து நீங்குவதற்க்கு அந்த சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் காரணமாக இரவு நேர தபால் புகையயிரதம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
எவ்வாறாயினும் இரவு 9 மணியளவில் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்தது.