புதிய செயற்கைக் கோளை விண்ணில் செலுத்திய சீனா!

Date:

விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலை வகிக்கும் வகையில் சீனாவின் சமீபத்திய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

சீனா தனக்கென்று புதிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்குவது, நிலவுக்கு மனிதனை அனுப்புவது என புரட்சிகர திட்டங்களை வகுத்து செயல்படுகிறது.

மேலும் தனது ரொக்கெட்டுகளை கொண்டு செயற்கைக்கோள்கள் ஏவி விண்ணகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றது.

அந்த வகையில் காலநிலை கண்காணிப்பு, அனர்த்த மேலாண்மை குறித்து மேம்பட்ட தகவல்களை பெறும் வகையில் சீன நிறுவனம் புதிய செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது.

ஜியுகுவான் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-4சி என்னும் ரொக்கெட் கோபேன்-12 04 என்ற செயற்கைக்கோளை சுமந்தப்படி விண்ணில் செலுத்தப்பட்டது.

பின்னர் திட்டமிட்டபடி அதன் சுற்று வட்டப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.

நில அளவீடு, நகர்புற வளர்ச்சியை தீர்மானம், விளைபொருட்கள் மதிப்பீடு உள்ளிட்ட திட்டங்களுக்கு இந்த செயற்கைக்கோள் பயன்படவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...