முஸ்லிம்களின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் மன்னிப்பு கோர மறுக்கும் கெஹலிய!

Date:

கொவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை தகனம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மன்னிப்பு கேட்க சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுப்பு தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பகிரங்க மன்னிப்புக் கோருமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதற்கு முன்னர் அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஆராய குழுவொன்றை நியமிக்க வேண்டும் என அமைச்சர் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் குற்றத்திற்கு ஒப்பானது என்பதால் சுகாதார அமைச்சு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்த கோரிக்கைக்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுப்பு வெளியிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...