ரஷ்ய ஜனாதிபதியின் திடீர் முடிவு!

Date:

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. 18 மாதங்களை கடந்தும் போர் நீடித்து வருகிறது.

இதில் உக்ரைனை சேர்ந்த அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதியை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் கைது நடவடிக்கையை தவிர்க்கவே, நேற்று முன்தினம் நடந்து முடிந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாட்டில், ஜனாதிபதி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்றார்.

இந்நிலையில், அந்நாட்டு அரசின் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

ரஷ்ய ஜனாதிபதி, ஜி – 20 மாநாட்டில் நேரடியாக பங்கேற்கும் திட்டம் எதுவும் இல்லை. எனினும், அவர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...