வங்கிகளுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள உத்தரவு!

Date:

உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் அனைத்து வட்டி வீதங்களை ஓகஸ்ட் 25 ஆம் திகதி முதல் குறைக்க மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.

அடமான வட்டி வீதங்கள், கடன் வட்டி வீதங்கள், கடனட்டை வட்டி வீதங்கள்போன்றவற்றின் வட்டி வீதங்களை குறைக்க இதன் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான வட்டி வீதத்தை பேணுவது தொடர்பான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1949 ஆம் ஆண்டின் பணச் சட்டம் எண் 58 இன் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவின் ஊடாக வட்டி வீதங்கள் தொடர்பான வழிகாட்டல்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

சராசரி கடன் வட்டி வீதத்தை 13.5 சதவீதமாக பேணுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடமான வட்டி விகிதம் 18 சதவீதமாகவும், கடனட்டை வட்டி விகிதம் 28 சதவீதமாகவும் பராமரிக்கப்படும் என்று உரிமம் பெற்ற வங்கிகளுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...