நாட்டில் நிலவும் வறட்சியான சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதியளித்துள்ளார்.
இந்த விடயத்தை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
“பயிர் சேதத்தை மதிப்பிடுவதற்கு விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, எம்பிலிபிட்டிய விவசாயிகளுக்கு விவசாய நடவடிக்கைக்கென வெலி ஓயாவிலிருந்து குறிப்பிட்டத்தக்க அளவு நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன்மூலம் அவர்களின் விவசாய நிலபரப்பில் 15 முதல் 20 வீதம் வரையான பயிர் நிலங்களுக்கு பாதுகாப்பை வழங்கமுடியும்” என எதிர்பார்க்கப்படுகின்றது.
நெற்பயிர்கள் கதிர் விடத் தொடங்கியுள்ள நிலையில் வயல்களுக்குத் தண்ணீர் வழங்கக் கோரி எம்பிலிப்பிட்டி விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.