குருநாகலை, குரீகொட்டுவையில் இயங்கி வரும் ஹாதியா உயர்கல்வி நிறுவனத்தின் நாலரை வருடக் கற்கை நெறிக்கு இம்முறை 41 பேர் தெரிவாகியுள்ளனர்.
ஜூலை 30 ஆம் திகதி நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து கலந்து கொண்ட விண்ணப்பதாரிகளில் இருந்து இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
க.பொ.த.உயர்தரத்தில் கலைப்பிரிவுக்கான பாடநெறிகளையும் ஆலிமா கற்கை நெறியினையும் இந்தக் கல்வி நிறுவனம் ஒருங்கே வழங்கி வருகிறது.
இந்தக் கற்கை நெறியில் நான்கு மொழிகளில் தேர்ச்சி, தொழில் மற்றும் வாழ்க்கைக் கலைப் பயிற்சிகள், இஸ்லாமியக் குடும்ப வழிகாட்டல், ஆன்மீக மற்றும் பண்பாட்டுப் பயிற்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஹாதியா உயர்கல்வி நிறுவனத்தில் கற்று உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவிகளில் கணிசமான எண்ணிக்கையினர் வருடா வருடம் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதோடு தேசிய கல்விக் கல்லூரிகளுக்கும் தெரிவாகி வருகின்றனர்.
தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பாடநெறிகள் இம்மாதம் 27 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.