1200 அடி உயரத்தில் ஊசலாடிய கேபிள் கார்: 14 மணி நேரத்துக்கு பின் குழந்தைகள் உள்பட 8 பேரும் மீட்பு!

Date:

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்துன்வா பிராந்தியமானது கரடுமுரடான மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும், நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பிரதேசம் ஆகும்.

இங்குள்ள பள்ளத்தாக்குகளைக் கடக்க பாலங்கள் அமைக்க முடியாததால், மக்கள் ஒரு மலையிலிருந்து எதிரே உள்ள மலைக்கு அந்தரத்தில் கேபள் கார் எனப்படும் ஒரு கயிறின் மூலமாக இயக்கப்படும் சிறு வாகனத்தில் அமர்ந்து பயணம் செய்கின்றனர்.

குழந்தைகள் பாடசாலைக்கு செல்ல கேபள் கார் மூலமாக ஒரு மலைப்பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்வது வழக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், நேற்று காலை 7 மணியளவில் 6 குழந்தைகள், 2 பெரியவர்கள் என மொத்தம் 8 பேர் ஒரு கேபள் காரில் பயணம் செய்துள்ளனர்.

தரையில் இருந்து சுமார் 1,200 அடிக்கு மேலே அது செல்லும்போது கயிறு திடீரென அறுந்தது. இதனால் அந்த கேபள் கார் பயணிகளுடன் அந்தரத்தில் ஊசலாட தொடங்கியது.

இந்நிலையில், 14 மணி நேரத்துக்குப் பிறகு குழந்தைகள் உட்பட 8 பேரும் மீட்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என பிரதமர் அன்வர் உல் ஹக் ககர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...