இவ்வாண்டில் தற்போது வரையில் 123 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் , இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40 வீதம் அதிகம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தற்போது நிலவும் வறண்ட காலநிலை காரணமாக வேண்டுமென்றே அல்லது கவனக்குறைவான மனித நடவடிக்கைகளினால் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறான காடழிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அனைவரும் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காடழிப்பு செயற்பாடுகள் மழையைத் தரும் என்ற மூட நம்பிக்கையின் காரணமாக கிராமங்களில் உள்ள சிலர் காடுகளுக்கு தீ வைப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினர், பொலிஸார் , தீயணைப்புப் படை மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து காட்டுத் தீயை விரைவாகக் கட்டுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
.