50,000 இற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை!

Date:

13 மாவட்டங்களில் உள்ள 51,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் வரட்சியினால் 13 மாவட்டங்களில் 171,781 நபர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலையால் 51,641 குடும்பங்கள் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 70,000 க்கும் மேற்பட்ட தனிநபர்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர், சங்கானைப் பகுதி ஜூன் மாதத்திலிருந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை போதிய மழை பெய்யாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...