இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை AI தொழில்நுட்பத்தில் பார்பியாக மாற்றியுள்ளனர்.
பார்பி திரைப்படம் கடந்த மாதம் 21ம் திகதி வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது.
குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பிடித்தமான பார்பி பொம்மைகளை பின்னணியாக வைத்து கிரெட்டா கெர்விக் இப்படத்தை இயக்கியிருந்தார்.
இப்படத்தில் நடித்த மார்கட் ராபி, ரியான் கோஸ்லிங் இருவரினது உடை உள்ளிட்ட அனைத்தும் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்து வருகின்றது.
இந்நிலையில் பார்பி நாயகன் ரியான் கோஸ்லிங் போல இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாறியுள்ளார்.
AI தொழில்நுட்பத்தில் ஹொலிவுட் நடிகர்களையே மிஞ்சிவிடும் அளவு இருக்கும் இந்த புகைப்படம் இலங்கையர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.