அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்கள்: நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

Date:

வடக்கு, கிழக்கில் இருந்து கொழும்பிற்கு பயணம் செய்யும் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுதல் மற்றும் அனுமதி பத்திரமின்றி பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த 26.05.2023 அன்று இடம்பெற்ற அமைச்சு மட்ட ஆலோசனைக்குழு கூட்டத்தில் அவர் குறித்த பிரேரணை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், அதற்குரிய பதிலறிக்கை கடந்த வியாழக்கிழமை 24.08.2023 இடம்பெற்ற அமைச்சு மட்ட ஆலோசனைக்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் சோதனை குழுக்கள் மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் சோதனை செய்துள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் இடம்பெற்றால் அவை தொடர்பான முறைப்பாடுகளை செய்யுமாறும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...