அமைச்சரவை அமைச்சர்களின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை: பிரதி சபாநாயகர் குற்றச்சாட்டு!

Date:

உடவலவ நீர்தேக்கப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதில் ஒருசில அமைச்சரவை அமைச்சர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ குற்றச்சாட்டு முன்வைத்துள்ளாா்.

இதுதொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,  உடவலவ நீர்தேக்கத்தில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதால் மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனா். இந்த நீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களின் ஒத்துழைப்பு மிகவும் கீழ்மட்டத்திலேயே இருக்கிறது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் இவர்கள் செயற்படுவது இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. எனவே, இதனை தொடர்ந்து காலந்தாழ்த்தாமல் உடனடியாக கலந்துரையாடலை நடத்தி பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

மக்களின் அத்தியவசிய தேவையை பற்றி சிந்தித்து செயற்பட அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. ஒருசில தீர்மானங்களினால் வீழ்ச்சி ஏற்படுமாக இருந்தால் அதற்கான நிவாரணத்தை எவ்வாறு பெற்றுக்கொடுக்க போகிறார்கள் என்பது புரியவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...