ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டன

Date:

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 1,000 இற்கும் மேற்பட்ட வாள்கள், வெடிகுண்டு துண்டுகள், ஈட்டி ஆயுதங்கள் ஆகியவை நீதிமன்ற உத்தரவுப்படி ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

கடற்படை அதிகாரிகளுடன் சுரனிமலை கடற்படை அதிகாரிகள், 1000 கடல் மைல் தொலைவிலும், 1000 அடி ஆழத்திலும் ஆழ்கடலில் இந்த ஆயுதக் குவியலை மூழ்கடித்து அழித்துள்ளனர்.

பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸீன் உத்தரவுக்கமைய, மேலதிக நீதவான் பசன் அமரசிங்க, நீதிமன்ற பதிவாளர், வழக்குகளின் பாதுகாவலர் மற்றும் நீதிமன்ற ஊழியர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த ஆயுதத் தொகையை மூழ்கடித்து அழித்துள்ளனர்.

இதன் மூலம் 1000 வாள்கள், கத்திகள், நுனி ஆயுதங்கள், வெடிகுண்டு பாகங்கள், 08 துப்பாக்கிகள் மற்றும் 10 கல்கட்டாஸ் ரக துப்பாக்கிகள் அழிக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...