உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமை நாட்டின் ஜனநாயகத்தை பாதிக்கும் பாரிய பிரச்சினை என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
தற்போது காலவரையறையின்றி இழுத்தடிக்கப்பட்டு வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாமைக்கு பதிலளிக்கும் வகையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் குறைந்தபட்சம் ஒரு தேர்தலையாவது நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் தெரிவித்தார்.
தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்தல்களில் ஏதேனும் ஒன்றையாவது உலக ஜனநாயக தினமான செப்டம்பர் 15க்கு முன்னதாக நடத்தலாம் என்றும் மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை வெளிட்டிருந்தார்.
மேலும், மக்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் ஆணை எதுவுமின்றி, ஆளுநர்கள், செயலாளர்கள் மற்றும் ஆணையர்களால் நாட்டை ஆளுவது சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததையும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நினைவுபடுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.