கல்வி அமைச்சின் அறிவிப்பு!

Date:

கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் தொழிற்கல்வி பாடங்களுக்காக மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தொழிற்கல்வி கற்கைநெறி முன்னெடுக்கப்படும் 525 பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பெறுபேறுகள் இந்த தெரிவின் போது கருத்திற் கொள்ளப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி தொழிற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 12 ஆம் தரத்தில் பாடசாலை கல்வியை நிறைவு செய்து 13 ஆம் தரத்தில் தொழிற்கல்வி தொடர்பான பாடங்களின் கீழ் என்.வி.கிவ் நான்காம் நிலை தொழிற்பயிற்சி நெறியொன்றை நிறைவுசெய்ய முடியும்.

சிறுவர் உளவியல் மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆய்வுகள், வாகன இயந்திர தொழில்நுட்பவியல் மற்றும் ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட இருபது பாடங்கள் இந்தத் தொழிற்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளன.

13 வருட உறுதிப்படுத்தப்பட்ட கல்வியை வழங்கும் நோக்கில் இந்த தொழிற்கல்வி நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இது தொடர்பான விண்ணப்பங்களை உரிய பாடசாலைகளின் அதிபருக்கு அனுப்பிவைக்குமாறும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...