சிறைச்சாலையில் பக்டீரியா பரவலால் கைதிகளை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்வதில் கட்டுப்பாடு

Date:

காலி சிறைச்சாலையில் பரவிவரும் மெனிங்கோகோகஸ் (Menigococcus) பக்டீரியா காரணமாக வழக்கு விசாரணைகளுக்காக கைதிகளை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்வதை எதிர்வரும் 2 வாரங்களுக்கு மட்டுப்படுத்துமாறு சுகாதார அமைச்சு, சிறைச்சாலை திணைக்களத்துக்கு அறிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த காலப்பகுதியில் புதிய கைதிகளை சிறைச்சாலைக்குள் அனுமதிப்பதை இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறைக் கைதிகளை பார்வையிடச் செல்லும் போது சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு உறவினர்களுக்கு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இந்தநிலையில், தற்போது குறித்த பக்டீரியா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்

அதேநேரம், காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...