நலன்புரி கொடுப்பனவுகள் இன்று ஆரம்பம்!

Date:

நாட்டில் தெரிவு செய்யப்பட்ட 15 இலட்சம் பயனாளிகளில் விபரங்கள் உறுதி செய்யப்பட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கான, ஜூலை மாதத்துக்கான கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் நலன்புரி நன்மைகள் சபையினால் வரவு வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தகவல்களை விரைவாக சரிபார்த்த பின்னர், மீதமுள்ள பயனாளிகளுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பிலான கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது நிறைவடைந்தவுடன் அனைத்து பயனாளிகளுக்கும் பணம் வைப்பிலிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தவறான தகவல் அளித்து சலுகை பெற்றவர்கள் இருப்பின், பெறப்பட்ட பணத்தை மீட்டு நலன்புரி நன்மைகள் சபையின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...