இலங்கை, பொருளாதார நெருக்கடியுடன் போராடிக்கொண்டிருந்த போதிலும், இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாணய மாற்று பொறிமுறையின் கீழ் பெற்ற 200 மில்லியன் டொலர் கடனில் 50 மில்லியன் டொலர்களை பங்களாதேஷிற்கு நேற்று செலுத்தியதாக டாக்கா ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அதிகாரிகளால் முதல் தவணை செலுத்தப்பட்டதை உறுதிப்படுத்திய பங்களாதேஷ் வங்கியின் (BB) செய்தித் தொடர்பாளர் Md Mezbaul Haque, கடந்த வாரம் ஒகஸ்ட் 17 ஆம் திகதி தவணை பெறப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த தொகை நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை உயர்த்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்த மாதத்திற்குள் இரண்டாவது தவணையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என மத்திய வங்கியின் நிர்வாக பணிப்பாளர் ஹக் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2021 செப்டெம்பரில் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டிருந்த தெற்காசியப் பொருளாதாரம் மீண்டு வருவதற்கு பங்களாதேஷ் தனது வெளிநாட்டு இருப்பில் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனை இலங்கைக்கு வழங்கியது.