முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்த மஹிந்த ராஜபக்ஷ சவால் சம்பியன்ஷிப் பாராளுமன்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டி, மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (12) நுவரெலியா மாநகர விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ஷ, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட, நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த ஹக்மான ஆகியோர் இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.
இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இரண்டு போட்டிகள் இடம்பெற்றதுடன் இரண்டு போட்டிகளிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி வெற்றிபெற்றுள்ளது.