உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 4×400 மீற்றர் தொடரோட்டப் போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதுடன் ஆசிய அளவிலான புதிய சாதனையையும் படைத்தனர்.
புதாபெஸ்டில் நடந்த ஹீட்ஸ் போட்டியில் முஹம்மது அனஸ், அமோஜ் ஜேக்கப், முஹம்மது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 2:59:05 வினாடிகளில் இலக்கை எட்டி 2வது இடம் பிடித்தது.
முஹம்மது அனஸ், அமோஜ் ஜேக்கப், முஹம்மது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோரின் முயற்சிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.