பெருந்தோட்டப் பகுதிகளை இலக்குவைத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தீவிர பிரச்சாரம் :மக்கள் கடும் எதிர்ப்பு!

Date:

(file photo)

இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பு இன்று நடத்திய கூட்டமொன்றில் அவர்கள் வழங்கிய போதனைக்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், குறித்த கூட்டத்தை உடனடியாக நிறுத்தி போதனையாளர்களையும் வெளியேற்றியுள்ளனர்.

பெருந்தோட்டப்பகுதிகளில் அண்மைக்காலமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவரும் சூழலில் இரத்தினபுரி இறக்குவானையில் இன்று நடைபெற்றுள்ள சம்பவம் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

பெருந்தோட்டப்பகுதிகளை மையப்படுத்தி  ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்பாடுகளை விரிவுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு கட்டமாக இன்று இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பலாங்கொடை மற்றும் இரத்தினபுரியை மையப்படுத்தி செயல்படும் செயல்பாட்டாளர்கள் இன்று காலை 10 மணியளவில் கூட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

இக்கூட்டத்தில் இறக்குவானை நகர் மற்றும் அண்டிய தோட்டப்பகுதியில் உள்ள மக்களை இவர்கள் அழைத்துள்ளனர். கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்களுக்கு தீவிர இந்து மதப் போதனைகளை வழங்குவதாக சிலர் கூச்சலிட விடயத்தில் ஆலய நிர்வாக சபையினர் தலையிட்டுள்ளனர்.

தீவிர இந்து மதப் போதனைகளுக்கு அனுமதிக்க முடியாதெனவும் இது மதவாத போக்கு வழிவகுக்கும் எனவும் கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டு போதனைக்காக வந்தவர்களும் ஆலய நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் இவ்வாறான போதனைகளுக்கு அனுமதியளிக்கப்படாது எனவும் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டாளர்கள் மலையக பகுதியில் மிகவும் வறுமையான மக்களை இலக்குவைத்து தீவிர மதவாத போக்குகள் அவர்களை ஈர்க்கும் விதத்தில் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாகவும் அவர்களுக்கு பல உதவிகளை வழங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...