மிகக்குறைந்த வருமானம் கொண்ட நாடாக இலங்கை!

Date:

தெற்காசியப் பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த வருமானத்தைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுவதாக வெரிடே (verite) ரிசர்ச் என்ற நிறுவனம் முன்னெடுத்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 17 வருடங்களில் இலங்கை தமது வருமான இலக்குகளை அடையத் தவறியுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தில் வருவாயை அதிகரிப்பதற்கான உடன்பாட்டையும் இலங்கை உள்ளடக்கியுள்ளது.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் வருமான இலக்குகள் தொடர்பான 12 நிகழ்ச்சி திட்டங்களில் 3 திட்டங்களை மட்டுமே இலங்கை எட்டியுள்ளதாக வெரிடே ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்க வருவாயை ஈட்டுவதில் வரி வருவாய் கணிசமான பங்கை வகிக்கிறது எனவும் இந்த ஆண்டு வரி வருவாய் மூவாயிரத்து 130 பில்லியன் ரூபாவாக இருக்கும் எனவும் அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த வருட இறுதிக்குள் இலங்கை அரசாங்கத்தின் கணிப்பை விட குறைந்த வருமானத்தை அதாவது 2 ஆயிரத்து 940 பில்லியன் ரூபா வரி வருவாயைப் பெறும் என சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளது.

எனினும், வருடத்தின் முதல் காலாண்டில் 578 பில்லியன் ரூபா மாத்திரமே உண்மையான வரி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி வருட இறுதிக்குள் 2 ஆயிரத்து 762 பில்லியன் ரூபாவை மட்டுமே ஈட்டமுடியும் எனவும் வெரிடே ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது

Popular

More like this
Related

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...

சில மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை!

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை...