முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா காலமானார்!

Date:

முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா காலமானார். இன்று(26) அதிகாலை கொழும்பில் உள்ள அவரது வீட்டில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

அன்னாரது ஜனாஸா தற்போது Kirulopone இலுள்ள Prime Apartmentயில் வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரான இவர் அண்மையில் நாடு பூராகவும் கட்சி புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் சம்மாந்துறை மற்றும் கல்முனை தொகுதியிலும் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க ஆலோசனையில் பிராந்தியத்தில் கட்சியை பலப்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் தற்போது ஐக்கிய தேசிய கட்சியில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் கட்சிக்கான ஆதரவு கோரும்  நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 1999 ஆண்டுகளில் தனியொரு மனிதனாக நாட்டின் தேசிய கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணிலுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்து இணைந்து அம்பாரை கரையோர பிரதேசமெங்கும் பாரிய பங்களிப்பை வழங்கி ஐக்கிய தேசிய கட்சிக்கு எழுச்சியை உருவாக்கியவர் மயோன் முஸ்தபா என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் இன்று (19) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு...

பல பிரதேசங்களுக்கு மழைக்கான வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

22வது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் !

தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தால் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பின்...

ஒரு அரசை உருவாக்குவதில் இலங்கையின் நிறைவேறாத பணி

–ரிசா யெஹியா சிரேஷ்ட கட்டிடக் கலைஞர். நாட்டிற்கு வெறும் நல்ல அரசாங்கம் மட்டும் தேவையில்லை....