17 ஆண்டுகள் பழமையான காசா பகுதியில் முதல் முறையாக பூனைகளுக்காக கஃபே திறக்கப்பட்டுள்ளது.
காசாவில் புதிதாகத் திறக்கப்பட்ட இந்த பூனைக் கஃபே முற்றுகையிடப்பட்ட பிரதேசங்களில் வாழும் பாலஸ்தீனியர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது மனித-விலங்கு தொடர்புக்கு தனித்துவமான இடத்தை வழங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், காபி குடிக்கவும், பூனைகளுடன் நேரத்தை செலவிடவும் இந்த கஃபே’க்கு மக்கள் செல்வதாக கூறப்படுகிறது.
இந்த கபேயின் நிறுவனரான 52 வயதான நயமா மாபெட், காசா பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மோதல்களின் அழுத்தங்களில் இருந்து தப்பிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று கூறுகிறார்.
2007ஆம் ஆண்டு முதல் பொழுதுபோக்கிற்கான வேறு வழிகள் இல்லாத காரணத்தினாலும் அடிக்கடி மோதல்களை எதிர்நோக்கும் மக்களுக்காகவும் மிகவும் நல்லதொரு சந்தர்ப்பமாக அமையும் என அதன் உரிமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலருக்கு பூனைகள் பிடிக்கும் ஆனால் அவற்றை எங்கு வைப்பது, எங்கு விளையாடுவது என்று அவர்களுக்குத் தெரியாது, அதனால் அவர்களுக்காக இந்த இடத்தை உருவாக்கினேன், அங்கு அவர்கள் வந்து, மகிழ்ச்சியாக இருக்கவும், மன அழுத்தம் நீங்கி, மகிழ்ச்சியுடன் வெளியேறலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த கஃபே பூனைமேல் விருப்பம் கொண்டவர்களை ஈடுபடுத்துவதையும், பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல செல்ஃபிக்கான வாய்ப்பையும் உருவாக்குவதாக உளவியலாளர் பஹ்சாத் அல்-அக்ராஸ் கூறுகின்றார்.
காஸா போன்ற இடங்களில் இத்தகைய அழிவுகரமான போர்கள் மற்றும் பிற கஷ்டங்களில் உள்ளவர்களுக்கு சிகிச்சையாக இருக்கும். ‘மனிதர்களுக்கு விலங்குகளுடன் ஒரு வகையான தொடர்புகளை வழங்கும் எந்த இடமும் நேர்மறையான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது’ என்று அல்-அக்ராஸ் கூறினார்.
இதேவேளை இந்த ஹோட்டலில் முக்கியமாக பாரசீக பூனைகள் உள்ளன, ஆனால் துருக்கிய அங்கோரா மற்றும் கலப்பின பூனைகள் உள்ளன.