வெள்ளவத்தை உதைப்பந்தாட்ட மோதல்: ஐவருக்கு விளக்கமறியல்!

Date:

வெள்ளவத்தை குரே மைதானத்தில் நேற்று நடைபெற்ற பாடசாலை உதைப்பந்தாட்ட போட்டியின் போது பாடசாலை மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐந்து பேரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (08) கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த ஐந்து சந்தேக நபர்களும் அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கல்கிசை நீதவான் கோசல சேனாதீர உத்தரவிட்டுள்ளார்.

பொரளை வெஸ்லி கல்லூரி மற்றும் மருதானை ஸாஹிரா கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான உதைப்பந்தாட்டப் போட்டி வெள்ளவத்தை குரே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்தப் போட்டியின் இறுதியில் போட்டியை பார்வையிட வந்த பார்வையாளர் குழுவுக்கும், மாணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் சுமார் 40 மாணவர்கள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட ஐவரும் வெள்ளவத்தை மற்றும் கிருலப்பனை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...