அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப இந்த புனித நாளில் ஒன்றுபடுவோம்: அல்ஹாஜ் ஹசன் மௌலானா

Date:

இன்று 2023 செப்டம்பர் மாதம் 28ம் திகதி வியாழக்கிழமை மீலாதுன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பு இலங்கை முஸ்லிம் விவகார சமய தலைவர் அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹசன் மௌலானா அல்-காதிரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

அன்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளான இன்று நம் தாய் நாடான இலங்கையின் வளர்ச்சிக்காக எல்லாம் வல்ல அல்லாஹு தஆலாவிடம் பிரார்த்திப்போம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த வருடம் நம் அனைவருக்கும் புனித ரபீஉல் அவ்வல் மாதத்தில் மவ்லிதுர் ரசூல் மஜ்லிஸை 12-நாட்கள் நடாத்தி நமது உயிரிலும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றை ஓதி மக்களுக்கு உணவு வழங்கும் பாக்கியமும் கிடைத்தது எல்லாப் புகளும் இறைவனுக்கே.

நமது அன்பிற்குரிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் ஸலாத்தை பரப்புங்கள், ஜாதி, மத வேறுபாடின்றி மக்களுக்கு உணவு வழங்குங்கள், இந்த புனித மாதம் இந்த நல்ல செயல்களைச் செய்ய ஒரு நல்ல வாய்ப்பாகும்.

இந்த மிலாதுன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்தநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும், இந்த நன்னாளில் நமது நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தினருடனும் நாம் அமைதியுடனும், சகோதரத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும்.

எனவே நாம் நமது அண்டை வீட்டார்களுக்கும் மற்றும் ஏழை மக்களுக்குக்கும் ஜாதி பேதம் பாராமல் உதவ வேண்டும், இந்த புனித நாளில் அவர்களை நன்றாக நடத்துவதும் அவர்களின் சிரமங்களுக்கு உதவுவதும் மிகவும் சிறந்ததாகும்.

பல்சமய, கலாசார நாடான இலங்கையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப இந்த புனித நாளில் நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...