அற்புதம் நிறைந்த வேதநூல் அல்குர்ஆன்!

Date:

கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளி குர்ஆனுடைய மகத்தான அற்புதத்தை வெளிப்படுத்துகின்ற ஒன்றாக இருகின்றது.

இக்காணொளியிலே நேர்காணலுக்குட்படுத்தப்படுகின்ற இளம் வயது இளைஞர் வாய்பேச முடியாத ஒருவராவார்.

அவரது குறையை நிவர்த்திக்கும் வகையில் குறித்த இளைஞரை பல இடங்களுக்கும் அவரது தந்தை அழைத்துசென்றுள்ளார். ஆனாலும் அவரால் அதற்கான சிகிச்சைகள் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை.

இச்சூழ்நிலையில் சிறுவனாக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட அற்புத நிகழ்வின் விளைவினால் இந்த வாலிபர் வாய் பேசமுடியாத நிலையிலும் கூட குர்ஆனை மனனம் செய்து குர்ஆனின் வாக்கியங்களை அழகிய தொனியில் ஓதக்கூடிய அசாதாரண ஆற்றலை பெற்றிருப்பதுதான் எல்லோரையும் யோசிக்க வைக்கிறது.

இந்நிலையில் தான் தொலைக்காட்சியொன்று பேட்டி எடுக்கும் வகையில் குறித்த இளைஞரையும் அவரது தந்தையும் வைத்து நேர்காணலை நடாத்தியிருக்கிறது.

இந்த நேர்காணலில் இளைஞர் தனது கதையை சைகைகளின் மூலம் சொல்லுகின்றார். அவருக்கு பக்கத்தில் இருப்பவர் மொழிபெயர்ப்பு செய்து நேர்காணலை நடத்துபவரிடம் விபரிக்கின்றார்.

அப்போது குறித்த இளைஞர் கூறுகையில், வாய்பேச முடியாத என்னால் எவ்வாறு குர்ஆனை ஓதமுடிகிறது என்றால். சிறுவயதில் எனக்கு ஒரு கனவு தோன்றியது அந்தக் கனவில் நீ குர்ஆனை ஓத வேண்டும் என்ற ஒரு செய்தி எனக்கு சொல்லப்பட்டது.

அதன் மூலம் குர்ஆனை மனனம் செய்து ஓதக்கூடிய வகையில் ஆற்றலை பெற்றேன் என்று வாலிபர் தனது கதையை சொல்கிறார்.

இவர் வாய்பேசமுடியாத பின்னணியை கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகின்ற அந்நாட்டின் சுகாதார மருத்துவ அறிக்கைகளும் கூட அந்த நேர்க்காணலின்போது காண்பிக்கப்படுகிறது.

அப்படிப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் அடிப்படையிலே இந்த இளைஞனின் நிகழ்வு அமைந்திருக்கின்றது என்பதனை இந்த தொலைக்காட்சி நேர்காணல் காண்பித்திருக்கின்றது.

அல் குர்ஆன் ஒரு அற்புதம் என்பது குர்ஆன் பல இடங்களில் சொல்கின்ற விஷயம். அந்த வகையில் இந்த வாலிபர் வாய்பேச முடியாத நிலையிலும் அல்குர் ஆனை மிக அழகிய தொனியில் ஓதுகின்ற இந்தக்காட்சியானது ‘குர்ஆன் ஒரு வாழும் அற்புதம்’ என்பது மற்றுமொரு நிகழ்கால சன்றாக அமைந்திருக்கின்றது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...